மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைந்த மரக்கறி விலை
Economy of Sri Lanka
Vegetables Price
By Sumithiran
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறானதொரு நிலை பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
மரக்கறித் தேவைகளில் எழுபது வீதமானவை
நாட்டின் மரக்கறித் தேவைகளில் எழுபது வீதமானவை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினால் பூர்த்தி செய்யப்படுகிறது.
நுகர்வோருக்கு பயனில்லை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், மரக்கறிகளின் விலை குறைவினால் நுகர்வோருக்கு பலன் கிடைக்கவில்லை எனவும் தம்புள்ளை பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சில்லறை விற்பனையாளர்களின் விற்பனைக்கு மொத்த வியாபாரிகள் பொறுப்பேற்க முடியாததே இதற்குக் காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி