அதிகரித்துள்ள முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள வர்த்தக, நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை ஒன்றின் தற்போதைய விலை 50 ரூபாவுக்கும் மேற்பட்ட வகையில் விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோழி இறைச்சிக்கான நிர்ணய விலை தொடர்பாக பரிசீலனை
இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் கோழி இறைச்சிக்கான நிர்ணய விலை தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி