இன்றுமுதல் குறைவடையும் மருந்துகளின் விலைகள் - வெளியிடப்பட்டது வர்த்தமானி
Keheliya Rambukwella
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
New Gazette
By Pakirathan
60 வகையான மருந்துகளின் விலைகள் இன்றையதினம் முதல் 16% குறைக்கப்பட உள்ளது.
இந்த விலைக்குறைப்பு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி

புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 17 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி