வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே (Prasad Manage) தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் நிலவுகின்ற தளம்பல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக வெளியான தகவலை, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (Vehicle Importers' Association) நிராகரித்துள்ளது.
7000 புதிய வாகனங்கள்
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 75 சதவீதமானவை இதுவரையில் விற்பனையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வாகன வரத்தில் பற்றாக்குறை இல்லை எனவும் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் ஊடாக இதுவரையில் 7000 புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பிரசாத் மானேகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புதிய வாகனங்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்றதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
