யாழின் பெருமைக்குரிய அணி எது..! நாளை மாபெரும் இறுதிப் போட்டி
Jaffna
By Vanan
பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 இன் இறுதிப்போட்டி நாளை (09) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 போட்டிகள் நடத்தப்படுகின்றது.
இறுதிப் போட்டி

ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி நாளையுடன் நிறைவடையவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டியில் சுண்டிக்குழி ஈகிள்ஸ் எதிர் ஜப்னா றோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவிருக்கின்றன. இறுதிப் போட்டியினை ஐபிசி தொலைக்காட்சி, ஐபிசி இணையத்தளம் என்பவற்றில் நேரலையாக கண்டுகளிக்கலாம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி