பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி (காணொளி)

Jaffna Hindu College IBC Tamil Jaffna Sri Lanka
By Kiruththikan Sep 03, 2022 10:09 AM GMT
Report

சுற்றுப்போட்டி

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி இன்று (03) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெறுகின்றது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டிகள்

முதலாவது போட்டி

இன்று(3) சனிக்கிழமை இடம்பெற்ற முதலாவது போட்டியில் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி மோதியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 19.1 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 126 ஓட்டங்களை பெற்றது.

127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி, 18.4 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 7 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டியில் யாழ் சீட்டாஸ் அணியை எதிர்த்து வேலனை வேங்கைகள் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சீட்டாஸ்  அணி 19.2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வேலனை வேங்கைகள் அணி , 18.2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 5 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.



மூன்றாவது போட்டி

மூன்றாவது போட்டியில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி மற்றும் ஏ1 ராஜா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்து பரிமாற்றங்களில் 6 விக்கட்களை இழந்து 210 ஓட்டங்களை குவித்திருந்தது.

211 என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏ1 ராஜா அணி 20 பந்து பரிமாற்றங்களில் 7 விக்கட்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.


ஆட்ட நிலவரம் - போட்டி 1

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் (இருபதுக்கு - இருபது) முதல் போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஜி.லிங்கநாதன் தெரிவானார்.  

ஆட்ட நிலவரம் - போட்டி 2

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

இரண்டாவது போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சுழிபுரம் றைனோஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்ரார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 4 விக்கட்கள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் றைனோஸ் அணி 17. 2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 9 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக றைசிங் ஸ்ரார்ஸ் அணியில் துடுப்பாட்டித்தில் 43 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசிய ஏ. ஜன்சன் தெரிவானார்.

ஆட்ட நிலவரம் - போட்டி 3

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

மூன்றாவது போட்டியில் கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் நைட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, கிரிக்கெட் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் அணி 19. 3 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன் மூலம் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக கிரிக்கெட் நைட்ஸ் அணியில் சகல துறையில் கலக்கிய எஸ். அஜித் தெரிவானார்.

ஆட்ட நிலவரம் - போட்டி 4

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

யாழ் சீட்டாஸ் அணியும் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் சீட்டாஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சீட்டாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17.4 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 10 விக்கட்கள் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 118 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியின் ஜி.ஜெரிக்தூசன் தெரிவானார்.   

ஆட்ட நிலவரம் - போட்டி 5

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணியும் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 144 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி 21 ஓட்டங்கள் மூலம் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக அபினாஷ் தெரிவானார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026