தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்கிறார் கனேடிய பிரதமர்
Canada
Justin Trudeau
By Vasanth
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் ஆகியவற்றை முன்னிட்டு சமஷ்டி லிபரல் கட்சி நாடாளுமன்றக் குழு இணையத்தில் நடத்தும் வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
இணையத்தில் இந்த விழா இன்று, 2021 ஜனவரி 21 ஆம் திகதி, மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும்.
கொவிட்-19 உலகத் தொற்றுநோய் வேளையில் தமிழ்க் கனேடிய முன்களப் பணியாளர்களும், அத்தியாவசிய பணியாளர்களும் ஆற்றும் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த விழா அமையும்.
தைப்பொங்கலையும், தமிழ் மரபுத் திங்களையும் முன்னிட்ட வரவேற்பு விழா
திகதி: 2021 ஜனவரி 21, வியாழக்கிழமை
நேரம்: மாலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை
தளம்: Facebook.com/garyforsrp
4ம் ஆண்டு நினைவஞ்சலி