பிரதமர் ஹரிணியின் எளிமை : வைரலாகும் படம்
Prime minister
Viral Photos
Harini Amarasuriya
National People's Power - NPP
By Sumithiran
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தனியாக பொருட் கொள்வனவிற்கு சென்றுள்ளார்.
சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு அவர் பொருள் கொள்வனவிற்கு எவ்வித பந்தாவும் இல்லாமல் செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஒரேயொரு பாதுகாவலர் மட்டும் அவருக்கு பின்னால் செல்வதுவும் அந்த புகைப்படத்தில் உள்ளது.
எளிமையான செயற்பாடு
முன்னைய அரசாங்கங்களின் அமைச்சர்களின் மனைவியர் மற்றும் உறவினர்கள் ஒரு கடைக்கு சென்றால் எத்தனை வாகனங்கள் மற்றும் எத்தனை பாதுகாவலர்கள் வரிசை கட்டி நிற்பார்கள்.
அந்த நிலையை மாற்றி இன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய எளிமையாக செல்வது அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி