பிரதமர் ஹரிணி பிரித்தானியாவுக்கு விஜயம்!
London
United Kingdom
Harini Amarasuriya
By Dhilak
லண்டனில் நடைபெறவுள்ள அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன் இந்தத் தூதுக்குழுவில் மேலும் இரண்டு உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
விஜயத்தின் நிறைவு
பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (18) பிற்பகல் 1.20 மணிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-403 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, அவர்கள் அனைவரும் வரும் மே மாதம் 23 ஆம் திகதி மீண்டும் இலங்கையை வந்தடையத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |