கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய: பிரதமர் பதவியில் இருந்து விலகுவேன்! எச்சரித்த ரணில்
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ் வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் கடந்த வாரம் அரச தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் இருந்து விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரித்த கோட்டாபய
இதற்கு கோட்டாபய தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் அதனைச் ஒரு போதும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அரச தலைவரின் இந்த நிலைப்பாட்டை ஆட்சேபித்துள்ள ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்கவின் இந்த பதிலால் அரச தலைவர் கோபமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட சந்தி்ப்பை ஏற்பாடு செய்த திருக்குமார்
அரச தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் திருக்குமார் நடேசனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருக்குமார் நடேசன் பிரபல தொழிலதிபர் மற்றும் நிருபமா ராஜபக்சவின் கணவர் ஆவார்.
அண்மையில் திருக்குமார் நடேசன் டுபாயில் இருந்தபோது ரணில் விக்ரமசிங்க அவரை அழைத்து தனக்கும் அரச தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி, நாட்டிற்கு வருகை தந்த திருக்குமார் நடேசன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் நடேசன் அவர்களும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது.