போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க அரசாங்கம் தயார்..! பிரதமர் தகவல்
Kandy
Dinesh Gunawardena
Sri Lanka
Sri Lankan Peoples
President of Sri lanka
By pavan
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க அரசாங்கம் தயார் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்றையதினம்(31) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாட்டின் அனைத்து மக்களுக்காகவே சட்டம் மற்றும் அமைதி என்பன பாதுகாக்கப்படுகிறது.
சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க நடவடிக்கை
சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், அவசரகால சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனினும் அவர்களுடன் சிறந்த நட்புடணர்வுடன் அரசாங்கம் செயற்படுகிறது.
எனவே, இந்த நிலை தொடர்ந்து செல்லாது என நம்புகிறேன் " எனக் குறிப்பிட்டார்.
