கொழும்பில் பிரபல பாடசாலை அதிபர் கைது
colombo
school
principal arrest
By Jaso
கொழும்பு பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் ஒன்றிற்கு பிள்ளையொன்றை அனுமதிப்பதற்காக 1.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குறித்த பாடசாலையின் அதிபரே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் 200,000 ரூபாவை அதிபர் கோரியதாகவும், பின்னர் அந்தத் தொகையை 150,000 ரூபாவாகக் குறைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் பணத்தை பெற்றுக் கொண்டிருக்கும் போதே தலைமறைவாக இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அதிபரை கைது செய்ததாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நுவான் அசங்க தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி