இடமாற்றங்களால் நெருக்கடிக்குள்ளாகும் அதிபர், ஆசிரியர்கள் : ஆளுங்கட்சி எம்.பி சுட்டிக்காட்டு
வடக்கு மாகாணத்தில் உள்ள நிலையற்ற இடமாற்ற கொள்கைகள் காரணமாக ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் (Npp) நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthi) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தொடர்ந்து பல ஆண்டுகளாக இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருந்தும், சிலர் இடமாற்றங்களுக்காக நீண்டகாலமாக காத்திருப்பதன் மூலம் குடும்ப வாழ்க்கை மற்றும் சேவை துறைகளில் பாதிக்கப்படுகின்றனர்.
சரியான முறையில் இடமாற்றம்
இடமாற்றங்கள் தகுதி மற்றும் விண்ணப்பதாரர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான முறையில் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக, அரசியல் தலையீடு மற்றும் பாரபட்சம் இன்றி இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம்.
மேலும், பல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாமை காரணமாக கல்வி தரத்திலும் நிர்வாக சீர்குலைவு காணப்படுகிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |