சிறைக் கைதிகளை பார்வையிட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அனுமதி மறுப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை பார்வையிட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி அவர்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஐ.பி.சி. தமிழுக்கு குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை பார்வையிட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் ஆகியோர் இன்று காலை சென்றுள்ளனர்.
எனினும் இவர்களை கொரோனா தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
