இலங்கை சிறைகளில் உள்ள மரண தண்டனை கைதிகள் விபரம் வெளியானது
Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
மரண தண்டனை விதிக்கப்பட்ட 826 கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை பதிவுகள் குறிப்பிடுகின்றன. இவர்களில், 805 ஆண் கைதிகளும் 21 பெண் கைதிகளும் உள்ளனர் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த 387 ஆண் கைதிகளும் 06 பெண் கைதிகளும் உள்ளனர்.
36,000 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்
36 சிறைகளில் 36,000 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர், அவர்களில் சுமார் அறுபத்தைந்து சதவீதம் பேர் (65%) போதைப்பொருள் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
சிறைச்சாலைத் துறை ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 1400 செலவிடுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி