விரைவில் திரைக்கு வரும் - IBC தமிழின் மில்லர் முழு நீள திரைப்படம்
ஐபிசி (IBC) தமிழின் முழுநீளத்திரைப்படமொன்று விரைவில் வெளியாகியுள்ளது. ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைகின்றது,
ஊடகத்துறையில் தனது தடத்தை நிலையாக பதித்து வெற்றி நடை போடும் ஐபிசி தமிழ் அடுத்த இலக்குக்கான பாதையில் வெற்றி நடை போடுகிறது.
இலங்கை தமிழ் மக்கள் தாண்டி, சர்வதேச ஊடக துறையிலும் ஐபிசி தமிழின் வெற்றி ஈடு செய்ய முடியாதது.
வெற்றித் திரைப்படங்கள்
அந்த வகையில், தற்போது இலங்கையின் தமிழ் திரைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை பாதிக்கும் வெற்றி ஓட்டத்தை ஐபிசி தமிழ் நிறுவனம் ஆரம்பித்து இலக்கு நோக்கி பயணிக்கிறது.
இலங்கை தமிழ் திரைத் துறையில் இதற்கு முன்னர் ஐபிசி நிறுவனம் friday and friday மற்றும் பொம்மை போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியிருந்தது.
இந்த பெருமைகளை கொண்ட ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது மில்லர் என்ற மற்றுமொரு முழு நீள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.
தமிழ் கலைஞர்களின் திறமை
படக்குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் ஒரு இளைஞன் உதைப்பந்தை தன் கையில் ஏந்தியவாறு மைதானத்தில் நிற்கும் படியாக அமைந்துள்ளது.
பின்னணியில் மைதானத்தின் தோற்றமும் அதை சுற்றி ஒருபுறம் நீரும் மருபுறம் நெருப்புடனான அமைப்பில் மில்லர் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் கலைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு அறிமுகம் செய்து ஐபிசி நிறுவனம் வெற்றியடைய செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
