கிளிநொச்சி காவல் நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Dharu
கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்றைய தினம் 25.07.2025 குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளுக்காக காவல் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம்12.08மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய இரத்தினம் ராசு என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்தவர் என்றும், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

