ரஷ்யா உடனான உக்ரைனின் அடுத்த நகர்வு! ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு
உக்ரைனில் தற்போது நிறுத்தப்பட்டு உள்ள போர்க் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் செயல்படுத்த தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டால் ரஷ்யாவின் காவலில் உள்ள சுமார் 1,200 உக்ரைன் வீரர்களை விடுவித்து தாயகத்துக்கு அழைத்து வர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், பரிமாற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் ருஸ்டெம் உமேரோவ் கூறியிருந்தார்.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்த சந்திப்புகளில், கடந்த 2022 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் எட்டப்பட்ட இறுதி கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Image Credit: RBC-Ukraine
செயல்முறை விவரங்களை இறுதிப்படுத்த அடுத்த கட்ட ஆலோசனைகள் விரைவில் நடைபெறவுள்ளன என்றும், கைதிகள் வரும் புத்தாண்டும் கிறிஸ்துமஸும் தங்கள் குடும்பத்தாருடன் கழிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் உமேரோவ் வலியுறுத்தியுள்ளார்.
மௌனத்தில் ரஷ்யா
இதற்கிடையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “போர் கைதிகள் பரிமாற்றம் மீண்டும் தொடங்கும் என்று நம்புகிறோம்; அதை உறுதிசெய்யும் வகையில் முக்கியமான சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Image Credit: Le Monde
எவ்வாறாயினும், ரஷ்ய தரப்பிலிருந்து இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்