நிரம்பிவழியும் சிறைச்சாலைகள் : எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
சிவில் குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, கைதிகளை வீட்டுக்காவலில் வைக்கும் நடவடிக்கை இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கான சட்ட வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலை நெரிசலுக்கு தீர்வு
இதன் மூலம் சிறைச்சாலை நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிவில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களது சொந்த வீடுகளிலேயே வீட்டுக்காவலில் வைத்து, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி