இன்று முதல் தனியார் பேருந்து சேவையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு
தனியார் பேருந்து சேவைகளை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று (8) முதல் தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது
கொழும்பில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே, அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண திருத்தம்
அத்துடன், தங்களின் சங்கத்தினால் கோரப்பட்ட பேருந்து கட்டண திருத்தம் அல்லது மானியம் வழங்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி அனைத்து எரிபொருள் விலைகளையும் அதிகரித்திருந்தது.
அதன்படி, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு இணையாக பேருந்து கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமென பேருந்து சங்கங்கள் கோரி வருகின்றன.
எரிபொருள் விலை
இந்த நிலையில், பேருந்து கட்டண திருத்தங்களை மேற்கொள்ளும் அளவுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அவை எந்தவித உடன்பாடுமின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 13 மணி நேரம் முன்