வடக்கில் முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவைகள்!

Jaffna SL Protest Northern Province of Sri Lanka Private Bus Owners Association
By Sathangani Jun 27, 2025 08:04 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம்  (Jaffna) மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (27) காலை கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு இடைக்கால தடை : ஐ.நா ஆணையாளர் அழுத்தம்

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு இடைக்கால தடை : ஐ.நா ஆணையாளர் அழுத்தம்

 தனியார் போக்குவரத்து சேவை

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க தலைவர், ”இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று குறித்த சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது.

வடக்கில் முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவைகள்! | Private Buses Join The Protest Blocking The North

இதை அவதானித்த நாம் குறுத்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் இ.போ.சவினர் அடாத்தாக சேவையை முன்னெடுக்க முயன்றனர்.

ஏற்கனவே இச்சட்டவிரோத செயற்பாடு குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்துள்ளோம்.

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சட்டத்துக்கு முரணாக செயற்படுதல்

ஆனாலும் இதுவரை எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

அத்துடன் இ.போ.ச அடாத்தாக சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன் தனியார் போக்குவரத்து சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை உருவாகுவதற்கும் வலிந்து இழுக்கின்றனர்.

வடக்கில் முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவைகள்! | Private Buses Join The Protest Blocking The North

எனவே இவ்வாறான இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை தாம் முன்னெடுக்கவுள்ளோம்” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள் தான் : சி.வி.கே அதிரடி

செம்மணி போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள் தான் : சி.வி.கே அதிரடி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025