திங்கள் முதல் தனியார் பேருந்துகள் ஓடாது -வெளியானது அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சை
பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்காததால்,எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (6) அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், டீசல் பெறுவதற்கு பேருந்துகள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டீசல் பற்றாக்குறை
இந்த வாரம் பயணிகள் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசு முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கள்கிழமை முதல் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
