தனியாரின் கைகளுக்கு செல்லும் சாரதி அனுமதிப்பத்திர அட்டை
சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை தனியாரிடம் அச்சிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளாா்.
காரணம்
திணைக்களத்தில் உள்ள அச்சுப்பொறிகளின் திறன் போதிய அளவில் இன்மையால் சாரதி அனுமதிப்பத்திரங்களை உரிய காலத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளது.
புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு சுமார் 20 கோடி ரூபாவை செலவு செய்ய முடியாத நிலை காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் இருந்து அட்டையை அச்சிட்டு பெற்றுக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் ஒரு அட்டைக்கு 150 ரூபா வீதம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
