வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகள் விடுவிக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்துறை திணைக்களம் வசமுள்ள தனியார் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அக்காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (16) நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்துறை திணைக்களம் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் மற்றும வனவளத்துறை வசமுள்ள அரச காணிகள் தொடர்பில் ஆராய சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்கள்
ஒருசில மாவட்டங்களில் கிராம சேவகர் மட்டத்தில் தகவல் பெற்றுக் கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அவ்வாறான தன்மை காணப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட கூடிய தனியார் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும்.

அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகள் குறித்து கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் மீள்பரிசீலனை செய்யப்படுகிறது“ என தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் இடைக்கால அறிக்கை...! முற்றாக நிராகரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |