முன்பள்ளிச் சிறுவர்களுக்கு டியூஷன் நடத்துவது சட்டவிரோதம் - அதிரடி அறிவிப்பு
முன்பள்ளிச் சிறுவர்களுக்கான பிரத்தியே தனியார் வகுப்புகளை (டியூஷன்) நடத்துவது சட்டவிரோதமானது என முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம். வசந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான அபிவிருத்தித் திட்டமொன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மொனராகலை மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி குழுவுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதிக சுமையை சுமத்தக்கூடாது
தொடர்ந்து பேசிய அவர், முன்பள்ளி வயதிலுள்ள சிறுவர்களுக்கு பாடப்பரப்பு சார்ந்த பிரத்தியே வகுப்புகள் மூலம் அதிக சுமையை சுமத்தக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதிகள் வழங்கப்படாது என்றும், செவனகலை பகுதியிலுள்ள முன்பள்ளியொன்று மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து நாள் ஆசிரியர் பயிற்சி பட்டறை ஒன்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெளிக்கள நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
தனியாக இருக்கும் பிள்ளைகள்
அத்தோடு மொனராகலை போன்ற பகுதிகளில் சேனைப்பயிர்ச் செய்கை காலங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பிள்ளைகள் ஆபத்திற்குள்ளாகின்றனர்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான அபிவிருத்தித் திட்டமொன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |