நீரிழிவு நோய்க்கு தீர்வு : இன்சுலின் உள்ள பால் சுரக்கும் பசு இனம் கண்டுபிடிப்பு
அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர், நோய்க்கான மருந்துகள் மட்டுமல்லாமல் நோயை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கும் இன்சுலின் ஊசியின் அளவு குறைவாக இருப்பதனால் எல்லோருக்கும் இன்சுலின் கிடைப்பதென்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது, இதற்கு பல்வேறு மாற்று வழிகள் தேடப்பட்டு வருகின்ற போதும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர், அதன்படி நீரிழிவு நோயாளிகள் வெறும் பாலை குடித்தாலே அவர்களுக்கு தேவையான இன்சுலின் கிடைத்துவிடும் என்று கூறுகிறார்கள்.
இன்சுலின் தேவை
அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் யுனிவர்சிட்டி மற்றும் யுனிவர்சிடேட் டி சாவோ பாலோ ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கால்நடை பயோ தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் பசுவின் கருவில் இன்சுலின் தேவைக்காக மனித டி.என்.ஏ (DNA ) துணுக்கை கலந்துள்ளனர். இதன் விளைவால், பிறந்த கன்றுக்குட்டி வளர்ந்து மாடானது.
அந்த பசு மாட்டின் மூலம் கிடைத்த பாலில் ப்ரோஇன்சுலின் (Proinsulin) இருந்துள்ளது, இது இன்சுலின் உற்பத்திக்கு முந்தைய ப்ரோ ஹோர்மோன் நிலையாகும், அதிலும் அதிசயம் என்னவென்றால் ஒரு லீட்டர் பாலில் ஒரு கிராம் இன்சுலினை ஒரு மாடு உற்பத்தி செய்யும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகள்
இது பல்லாயிரக் கணக்கிலான இன்சுலின் அலகுகளுக்கு சமமானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர், தவிரவும், ஒரு சாதாரண மாட்டு மந்தையிலிருந்து முழு நாட்டிற்கும் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியும் என்றும் ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
மேலும், ஒரு மாடு நீரிழிவு நோயாளிகளுக்கு எட்டு ஆண்டுகளுக்குத் தேவையான இன்சுலினை கொடுக்கும் சக்தி வாய்ந்தது என்றும் இந்த ஆய்வு முடிவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று நடைமுறைக்கு கொண்டு வரும் திட்டம் பற்றி அந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |