கனடாவிலுள்ள இந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதல்
கனடாவில் (Canada) உள்ள இந்து கோவில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடா - வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீதே நேற்று (20) காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோவிலின் சுவர்களை சேதப்படுத்தியுள்ளதோடு சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
I went to the Lakshmi Mandir in Surrey that was vandalized last night by Khalistanis. This is the 3rd time it has been vandalized.
— Daniel Bordman (@DanielBordmanOG) April 20, 2025
I spoke to management and the devotees and they do not feel like the police or the political establishment cares at all. pic.twitter.com/xfppoSTHf4
இந்த சூழலில், மற்றுமொரு இந்து கோவிலான லட்சுமி நாராயணன் கோவிலையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்றாவது முறையாக சேதப்படுத்தப்பட்டதாக கனேடிய பத்திரிகையாளர் டேனியல் போர்ட்மேன் கூறியுள்ளார். குறித்த சம்பவத்தை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள காணொளி பதிவில் விளக்கியுள்ளார்.
அதில் நேற்று இரவு காலிஸ்தானியர்களால் சேதப்படுத்தப்பட்ட சர்ரேயில் உள்ள லட்சுமி நாராயணன் கோவிலுக்கு நான் சென்றேன். இது மூன்றாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகத்திடமும் பக்தர்களிடம் தான் பேசி போது காவல்துறை அல்லது அரசியல்வாதிகளோ சிறிதும் கவலைப்படுவதாக உணரவில்லை என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
