பஸிலுக்காக எம்.பி பதவியை துறந்தவருக்கு ஏற்பட்ட சிக்கல்
parliament
basil rajapaksha
jayantha kedegoda
By Jaso
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்த முன்னாள் எம்.பி ஜயந்த கெட்டகொடவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் பதவி அளிக்கப்பட்ட போதிலும், அந்தப்பதவியில் ஏற்னவே உள்ள ஜகத் வெள்ளவத்தை அப்பதவியை தொடர்ந்து வருகிறார்.
திறைசேரியின் செயலாளரால் ஜயந்த கெட்டகொடவுக்கு இப்புதிய பதவி அளிப்பதற்கான கடிதமும் கடந்த 7ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டது.
இருந்த போதிலும் அந்த கடிதத்தை இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஜகத் வெள்ளவத்த, பதவியை இன்னும் இராஜினாமா செய்யாமலிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி