தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய லொஹான் ரத்வத்தைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
சிறைச்சாலைகள் மற்றும் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை ஒரு வாரத்திற்குள் கைது செய்யுமாறு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளது.
அநராதபுரம் சிறைச்சாலையில் மதுபோதையில் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகள் சிலரை முழந்தாழிட வைத்து தலையில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அவரை ஒரு வாரத்திற்குள் கைது செய்யாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்து சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்கவினால் காவல்துறை மா அதிபருக்கு குறித்த கோரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்த சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகிய இருவரின் ஆலோசனைக்கு அமைய இந்த கடிதத்தை அனுப்புவதாக அவர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.