பொறுப்பற்று நடக்கும் இலங்கை மக்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண சாடல்
அபாயகரமான நிலையினை கருத்திற் கொள்ளாமல் நாட்டு மக்களும் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறார்கள் என்று லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் பயனற்றதாக காணப்படுகிறது. அபாயகரமான நிலையினை கருத்திற் கொள்ளாமல் நாட்டு மக்களும் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறார்கள்.
கொரோனா தடுப்பூசி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான இறுதி தீர்வல்ல. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், பொது மக்கள்ஒன்று கூடுவதை தவிர்த்தல், அடிக்கடி கைகழுவுதல்,தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் ஆகிய சுகாதார அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் இனி தங்களின் அடிப்படை பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அனைத்தையும் அரசாங்கம் அறிவுறுத்தாது என்றார்.