புதிய மின்சாரச் சட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் - கஞ்சன விஜேசேகர
புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு அனுமதி பெறுவதற்காக சட்ட வரைவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று(06) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, சட்டமா அதிபரிடமிருந்து சான்றிதழைப் பெற்றவுடன், அமைச்சரவையின் முன் வரைவு சமர்ப்பிக்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மாற்றத்திற்கான திட்டம்
A meeting with the Development Agencies was held to discuss the progress and the next steps on the CEB reforms. Final draft of the new electricity act has been handed over to the legal draftsman’s office for clearance & will be submitted to the Cabinet of ministers approval once… pic.twitter.com/rlmvqPo3G9
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 6, 2023
இதற்கிடையில், நிறுவப்படவுள்ள மின்சாரத்துறை சீர்திருத்த செயலகம், தொடர்புடைய மேம்பாட்டு நிறுவனங்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இணைந்து மாற்றத்திற்கான திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், USAID, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், தூதரகத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் எரிசக்தி நிபுணர்கள் என பலர் கலந்துகொண்டனர்.