ஜனாதிபதி தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள தடை: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் இடத்திற்கு போகும் போது ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) இன்று (12) இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், வாக்களிப்பு தினத்தன்று மாலை 4:00 மணிக்கு முன்னதாக அவற்றை பிரசுரிப்பதும் விளம்பரப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதம்
தபால் மூல வாக்களிப்பின் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த அனுமதித்ததன் மூலம் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் விடயங்கள் பாரதூரமானவை எனத் தெரிவித்த ரத்நாயக்க, வாக்களிப்பதை புகைப்படம் எடுக்காமல், யார் வாக்களிப்பார்கள் என்பதை அறிவிப்பதும் சட்டவிரோதமானது எனவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |