Project Freedom-இன் முக்கிய நகர்வு ! போர் நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்கா விளக்கம்
ஹோர்முஸ் நீரிணையில் நேற்று இடம்பெற்ற மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் கூறியுள்ளார்.
நேற்றைய மோதல்களைத் தொடர்ந்து போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "இல்லை, போர் நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை" என்று கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளும், வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான 'Project Freedom' நடவடிக்கையும் இரண்டு தனித்தனி செயல்முறைகள் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
முடிவை ஜனாதிபதியே எடுப்பார்
நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்வோம் என்றும், அதை மிகவும் தீவிரமாகச் செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இறுதியில், நடைபெறபோகும் சம்பவம் போர் நிறுத்த மீறலாக மாறுமா என்பது குறித்த முடிவை ஜனாதிபதியே எடுப்பார் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
போர் நிறுத்தத்தின் வரம்புகளை மீற வேண்டாம் என்றும், தனது நடவடிக்கைகளில் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் ஈரானை வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |