மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் அமர்வு நாளை (06) நடைபெறவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை இந்த விடயம் தொடர்பான வாய்மூலக் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இலங்கை மின்சாரச் சட்டம்
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு மற்றும் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 29(10) ஆம் பிரிவின் (திருத்தப்பட்ட) விதிகளுக்கு அமைவாக இந்த பொது கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

தேசிய அமைப்பு இயக்குநரகம் (NSO) , இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக இந்த விசேட மின்சாரக் கட்டணத் திருத்தத்தை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |