திருகோணமலையில் சட்டவிரோத புதையல் அகழ்வு: காவல்துறை விசாரணைகள் தீவிரம்
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில் உள்ள அரச மரச் சந்தியில் புதையல் தேடுவதற்காக குழியொன்றை தோண்டிய சந்தேக நபர் ஒருவரை கந்தளாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை - கந்தளாய் உள்ளூர் மக்களால் போற்றப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறித்த இடத்தில் இந்த புதையல் தேடும் நடவடிக்கை நேற்று (04) மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சுமார் ஐந்து அடி ஆழத்திற்குக் குழியை தோண்டியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நேற்று (04) கைது செய்யப்பட்ட நிலையில் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
வழக்கை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அந்த இடத்தின் உரிமையாளரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பெண் இன்று (05.05.2026) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |