முன்னாள் தடகள வீராங்கனைக்கு கிடைக்கவுள்ள புதிய பதவி
SriLanka
Athlete
Susanthika Jayasinghe
Dullas Alagaperuma
By Chanakyan
முன்னாள் தடகள வீராங்கனை தேசபந்து சுசந்திகா ஜயசிங்கவுக்கு (Susanthika Jayasinghe) புதிய பதவி வழங்கப்படவுள்ளது என அமைச்சரவை ஊடக பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alagaperuma) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் சிரேஷ்ட ஆலோசகா் பதவி வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.