மிதிகம சூட்டியின் 15 மில்லியன் பெறுமதியான சொத்து முடக்கம்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன்றின் பயன்பாடு, உரிமை மாற்றம் அல்லது விற்பனையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய வெலிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை பயன்படுத்துதல், உரிமை மாற்றம் செய்தல் அல்லது விற்பனை செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீடும் அது அமைந்துள்ள காணியும் சேர்த்து சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விதிக்கப்பட்டுள்ள தடை
இந்த வீடு, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாக நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, குறித்த சொத்தை இனிமேல் பயன்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது.
மிதிகம சூட்டி தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |