தமிழர் பகுதியில் முளைத்த பதாகையால் சர்ச்சை - வெடித்த மக்கள் போராட்டம்

Trincomalee Sri Lankan protests SL Protest
By Thulsi Jan 08, 2025 10:33 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

குறித்த போராட்டமானது இன்று (08) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெருகல் - வட்டவான் பகுதியில் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் அருகே கடந்த திங்கட்கிழமை (06.01.2025) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பெயர் பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது.

திடீரென முளைத்த பதாகையால் தமிழர் பகுதியில் பரபரப்பு

திடீரென முளைத்த பதாகையால் தமிழர் பகுதியில் பரபரப்பு

நில அபகரிப்பு 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொல்லியல் எனும் பெயரில் நில அபகரிப்பு இடம்பெறக்கூடாது என்பதை உறுதிசெய்யுமாறு கோரியும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் பகுதியில் முளைத்த பதாகையால் சர்ச்சை - வெடித்த மக்கள் போராட்டம் | Protest Against Archaeological Sites In Trinco

தொல்லியல் என பதாகை போடப்பட்ட வட்டவன் பகுதியிலிருந்து வெருகல் பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், தொல்லியல் சட்டம் தமிழருக்கு மட்டுமா? அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் விகாரை வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற சிறப்புரிமையை இழக்கும் அர்ச்சுனா - சபையில் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற சிறப்புரிமையை இழக்கும் அர்ச்சுனா - சபையில் கொந்தளிப்பு!

கோரிக்கைகள் அடங்கிய மகஜர் 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெருகல் பிரதேச செயலகத்திற்குச் சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸ் அவர்களிடம் கையளித்தனர்.

தமிழர் பகுதியில் முளைத்த பதாகையால் சர்ச்சை - வெடித்த மக்கள் போராட்டம் | Protest Against Archaeological Sites In Trinco

குறித்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்தின் சேருநுவரவுக்கான பொறுப்பதிகாரி G.கிறிசாந்த இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தொல்லியல் என போடப்பட்டிருந்த பதாகை குறித்த இடத்திலிருந்து நேற்றிரவு இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

தமிழர் பகுதியில் முளைத்த பதாகையால் சர்ச்சை - வெடித்த மக்கள் போராட்டம் | Protest Against Archaeological Sites In Trinco

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல்

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல்

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026