இலங்கை நாளை இரவு இருளில் மூழ்கும்..! விடுக்கப்பட்ட கோரிக்கை
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
By Dharu
மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு வீடுகளில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அனுருத்த சோமதுங்க கருத்து தெரிவிக்கையில்,
"நாளை மாலை 7 மணிக்கு, பிரதான ஆளி மூலம் உங்கள் வீட்டின் மின் அமைப்பை அணைக்கவும்.
மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்

மின் விளக்குகள், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்.
இதன் விளைவை அடையாளப்பூர்வமாக பிரபலப்படுத்துவோம்.'' என தெரிவித்தார்.
இதனிடையே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை சீரமைக்கக் கோரி நேற்று பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி