தமிழ் மக்கள் கோட்டாபயவின் ஹொட்டேலை அதிரடியாகச் சூழ்ந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகின!!
COP 26 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள 'சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலையிலே சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல உலகத் தலைவர்கள் கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இல் தங்கியிருக்கின்றார்கள். சிறிலங்கா அதிபர் கோட்டாபயவும் இந்த ஹோட்லிலேயே தங்கியிருக்கின்றார்.
இன்று அதிகாலை முதல் கோட்டாபயவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி தமிழ் மக்கள் அங்க ஹோட்லின் முன் திரண்டிருப்பது பல்வேறு உலகத் தலைவர்களினது கவனத்தை ஈர்த்து வருவதாகவும், சிறிலங்காவுக்கு பலத்த சங்கடங்களை விளைவித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் கோட்டாபயவின் ஹொட்டேலை அதிரடியாகச் சூழ்ந்துகொண்ட வீடியோ :