கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் சிறுவர் பூங்கா: எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
கிளிநொச்சியில் (Kilinochchi) இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (18) மாலை 2.30 மணியளவில் சட்டத்தரணி க.சுகாஸ் (Kanagaratnam Sugash) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - டிப்போ சந்தியிலுள்ள இராணுவ யுத்த வெற்றி நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் இராணுவத்தினரால் சிறுவர் பூங்கா அமைக்கப்படும் நிலையில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் போராட்டத்துக்கான காரணத்தை கேட்டு அமைதிப்படுத்த முனைந்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மேலும் வீதி போக்குவரத்துக்கு இடமளித்து போராட்டம் செய்ய காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டது.
சிறுவர் பூங்கா
இந்த நிலையில், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பகுதியை சுற்றியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதான வாயிலை மறித்து அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிப்போ சந்தியிலுள்ள இராணுவ வெற்றிச்சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் சிறுவர் பூங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |