கடைகளை மூடுமாறு மிரட்டிய மட்டக்களப்பு மாநகர முதல்வரால் குழப்பம்
இலங்கை தமிழரசு கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடைடைப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்காத கடைகளுக்கு சென்று மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மிரட்டியுள்ளார்.
அவர் கடை உரிமையாளர்களை கடைகளை மூடுமாறு வற்புறுத்தி அவ்வாறு செய்யாவிட்டால், கடைகளுக்கான அனுமதிபத்திரங்களை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.
இதன்காரணமாக விசனமடைந்துள்ள மக்கள், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்து காவல்துறையிலும் முறைப்பாடு அளித்து மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
களுவாஞ்சிகுடி பகுதியில் பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு இணங்க மட்டகளப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதி மற்றும் பிரதான வீதியை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளன.
எனினும் உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என்பன வழமை போன்று இயங்கி வருவதோடு, கிராமங்களிலுள்ள உள்ளுர் வர்த்தக நிலையங்களும் வழமை போன்று செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
மக்கள் தமது அன்றாட செயங்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும், போக்குவரத்துக்கள்
இடம்பெற்று வருவதையும் காணமுடிகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

