மீண்டும் தலைதூக்கவுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்கள் : எச்சரிப்பு விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர்
இலங்கையில் தொடர் போராட்டங்களை நடத்த சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தயாராகி வருவதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் சுயநலமான நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மை நாட்களில் பல அரசியல் கட்சிகளும் குடிசார் அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், அண்மையில் அதிகரிக்கபட்ட மின் கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை, அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கப்படவுள்ள வரிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கடந்த ஆண்டு காலிமுகத்திடலில் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.