ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக யாழில் விரைவில் போராட்டம்: எச்சரிக்கும் மீனவ சமூகம்!

Vijay Indian fishermen M K Stalin DMK Sri Lanka Fisherman
By Kanooshiya Oct 04, 2025 02:17 PM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமுகம் ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் (04.10.2025) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் இந்திய திரைப்படங்கள் வெளியிடுவதால் பரபரப்பு

கனடாவில் இந்திய திரைப்படங்கள் வெளியிடுவதால் பரபரப்பு

அரசியல் இருப்பு

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ”முதலமைச்சரே, நல்லெண்ண அடிப்படையில் வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த 2023 ஆம் ஆண்டு மூன்று மனுக்களை உங்களுக்கு அனுப்பியது. அதற்கு நீங்கள் எதுவித பதிலும் வழங்கவில்லை.

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக யாழில் விரைவில் போராட்டம்: எச்சரிக்கும் மீனவ சமூகம்! | Protest Against Stalin And Vijay Jaffna

எனினும், அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை தூக்கி வைத்து வடக்கு கடற்றொழிலாளர்களை பகைக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்கின்றீர்கள். கச்சதீவினால் தான் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக உங்களது அரசியல் இருப்புக்காக பொய்யான ஒரு குற்றச்சாட்டை தமிழ்நாட்டிலே நீங்கள் பேசாதீர்கள்.

வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டு அரசுக்கோ எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்கவில்லை.

தொடர்ச்சியாக இவ்வாறு பேசி தமிழ்நாட்டு மீனவர்களை வடக்கு மீனவர்களுக்கு எதிராக தூண்டுவீர்களாக இருந்தால் வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம்.

பரிதாபமாக பலியான இளம் தம்பதி! காவல்துறை விசாரணை

பரிதாபமாக பலியான இளம் தம்பதி! காவல்துறை விசாரணை

இரட்டை இழுவைமடி

இதேவேளை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை பேசுகின்றார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முதலே, இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினையை சமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என்று விஜய்க்கும், சீமானுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக யாழில் விரைவில் போராட்டம்: எச்சரிக்கும் மீனவ சமூகம்! | Protest Against Stalin And Vijay Jaffna

எனினும், நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. கச்சதீவு விவகாரத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக ஒருபோதும் வரலாறு இல்லை.

உலகத்திலேயே தடை செய்யப்பட்ட, கடல்வளத்தை கருவறுக்கின்ற இரட்டை இழுவைமடி தொழிலைத்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்கின்றனர். நீங்கள் இந்த இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு மாற்றுமுறை தொழிலை செய்யுங்கள்.

இதன்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கின்றோம்.

சட்டத்திற்கு அடிபணிந்த விஜய்: விசாரணைக்கு தயாரான புலனாய்வு குழு!

சட்டத்திற்கு அடிபணிந்த விஜய்: விசாரணைக்கு தயாரான புலனாய்வு குழு!

அத்துமீறி மீன்பிடி

இலங்கை இராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது.

இலங்கையின் சட்டத்தின்படி, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது வடக்கு கடற்றொழில் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடு.

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக யாழில் விரைவில் போராட்டம்: எச்சரிக்கும் மீனவ சமூகம்! | Protest Against Stalin And Vijay Jaffna

இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் தொழில் செய்வது குறித்து சிந்திப்பதற்கு கடற்றொழில் சமூகம் தயாராக இருக்கின்றது.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்பது எமது விருப்பம். அதைவிடுத்து வடக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான கச்சதீவு குறித்து அரசியல் மேடைகளில் பேசி மீனவர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாக இருக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவை இலங்கையிடம் கேட்க மறுத்த மோடி! ஸ்டாலின் கிளப்பும் அடுத்த சர்ச்சை

கச்சத்தீவை இலங்கையிடம் கேட்க மறுத்த மோடி! ஸ்டாலின் கிளப்பும் அடுத்த சர்ச்சை

ஜனாதிபதியை முழுமையாக நம்புகிறோம்: மனம் திறந்த மாக்கஸ் அடிகளார்!

ஜனாதிபதியை முழுமையாக நம்புகிறோம்: மனம் திறந்த மாக்கஸ் அடிகளார்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026