யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம்

Jaffna M A Sumanthiran School Incident
By Kajinthan Jul 18, 2026 03:19 PM GMT
Report

புதிய இணைப்பு

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாடசாலையின் நடைபவனி நிகழ்வுக்கு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனை அழைத்திருந்தோம். ஆனால் அவர் தான் இந்தியா செல்ல உள்ளதாக தெரிவித்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளக் கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்து பழைய மாணவர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே

போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம் | Protest Against Sumanthiran School Function

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், 150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது பழைய மாணவர்கள் யாரையாவது விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். பாடசாலைக்கு தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு

சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் 

சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு தெரியும். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமுகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமுகத்துடனேயே நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன்பின்னரே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.

யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம் | Protest Against Sumanthiran School Function

இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழுவானது தெரிவு செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால் அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த ஏற்பாட்டு குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பழைய மாணவர் சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை

நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை. எமது பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது. எமது போராட்டத்தால் யாருக்காவது மனஉளைச்சல் ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. எமது கருத்தினை கேட்காமல் இந்த விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம்.

யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம் | Protest Against Sumanthiran School Function

எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பழைய மாணவர்கள் என்ற வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்தப்பட வேண்டும் என்றனர்.

25 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை : ஐவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

25 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை : ஐவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026