வியாழேந்திரனுக்கு எதிராக நடந்த சவப்பெட்டி போராட்டம்
தனக்கு எதிராக திட்டமிட்டு பல சதி நடைபெறுவதாக இராஜங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வியாழேந்திரனுக்கு எதிராக இன்று (19) 2 சவப்பெட்டிகளுடன் ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பாக அவரிடம் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பான்மை இனத்தவர் மூன்று பேருக்கு கிரவல் அனுமதி பத்திரமும் மேலும் ஒரு பெரும்பான்மை இனத்தவருக்கு புதிய அனுமதி பத்திரமும் வழங்கப்பட்டிருந்தது.
மாவட்ட அபிவிருத்தி
குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது தொடர்பான விடயங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று தடை செய்தற்கு இவ்வாறு ஒரு சிலர் போராடி வருகின்றனர்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் மண் அகழ்வு தொடர்பான புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு எதிரானவர்கள் சிலர் இதற்கு பின்புலத்தில் இருந்து இன்று தனக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்ணகழ்வு மூலமாக மண் வளங்கள் அழிந்து கொண்டு வருகின்றமையினால் இதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கும் போது எமக்கு எதிராக பல சதிவலைகள் இடம்பெறுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |