ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Colombo
Drugs
Protest
By Pavi
ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பேரணியொன்று கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சற்று முன்னர் ஆரம்பமாகி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் வந்தடைந்துள்ளது.
ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்குவதைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான சதித்திட்டங்களைத் தோற்கடிக்க வேண்டும் எனவும், தவறுகளுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி