கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37 வது நாளாக தொடரும் போராட்டம்...
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இரண்டாவது கட்டமாக முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 37 வது நாளை எட்டியுள்ளது.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இன்று (30.07.2026) 37 வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
பிரதான கோரிக்கை
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இந்நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |