வரலாறு காணாத மக்களின் எழுச்சி - நான்காவது நாளாக தொடர்கிறது போராட்டம்
colombo
protest
srilankan crisis
four days
By Kanna
கொழும்பு - காலி முகத்திடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மழை வெயில் பாராது தற்காலிக கூடாரங்களை அமைத்து இன்றுடன் நான்காவது நாளாக காலி முகத்திடலில் மக்கள் போராடி வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை அரச தலைவருக்கு எதிராகப் பொதுமக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
வரலாறு காணாத இந்த மக்களின் எழுச்சி இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.






5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி