யாழில் ஜனாதிபதி அநுர வீதியில் நடப்பதால் பயனில்லை.! மக்கள் முன்வைத்த கோரிக்கை
யாழ். மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கு பின் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி நேற்றைய தினம்(19.01) செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “2019 ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் அப்போதைய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகால் இன்று வரை வழங்காமல் உள்ளது.
இதன் காரணமாக குறித்த பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திவர நிலையில் மழை காலங்களில் இருக்க இடம் இல்லாமல் அல்லல் படம் செயற்பாடுகள் வருடங்களாக தொடர்ந்து இடம்பெறுகிறது.
மன வருத்தம்
தற்போதைய அரசாங்கம் பாரபட்சமற்ற அரசாங்கம் என கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியரிடம் பெற்ற வீடு திட்டங்களுக்கான கொடுப்பனவகளை வழங்காமல் தங்களது ஆட்சிகள் புதிய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குகிறார்கள்.

இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையை தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
பிரச்சினைக்கு தீர்வு
யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமாரா திசநாயக்க வீதியில் நடந்து திரிகிறார் ஆனால் யாழ் மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கி உள்ளோரை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆகவே எமது பிரச்சனை தொடர்பில் வடமாகண ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம் எமது பிரச்சினையை விரைந்து தீர்க்க விடியின் எமது போராட்டம் தொடரும்.” என தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

